வட மாநிலத்தவர் பற்றிய வதந்தி கண்காணிப்புக் குழு அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

வட மாநிலத்தவர் பற்றிய வதந்தி கண்காணிப்புக் குழு அமைப்பு

சென்னை, மார்ச். 9 வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோன்ற போலி காட்சிப் பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தியது. இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வழக்கு பதிந்து வதந்தி பரப்பியோர் மீது கைது நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 அய்பிஎஸ் அதிகாரிகள் உட் பட 5 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், ‘புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சினைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைக்க, அவர்கள் கோரும் தகவல்களை அளிக்க 5 காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் காவல்துறை தலைவர் அவினாஷ் குமார், காவல்துறை துணைத் தலைவர் அபிஷேக் தீக் ஷித், துணை ஆணை யர் ஹர்ஷ் சிங், காவல்துறை கண்காணிப்பாளர்கள்  ஆதர்ஷ் பச்சேரா, சண்முக பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காவல்துறை தலைமை இயக்குநர்  அறிவுரை: இதற்கிடையே  காவல் அதிகாரிகளுக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு வழங்கிய அறிவுரையில், பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் தகவல்களை சேகரிக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment