வடமாநில தொழிலாளர் பிரச்சினை: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 6, 2023

வடமாநில தொழிலாளர் பிரச்சினை: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 6- வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக வதந்தி பரப்பு வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசி யல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர் பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் 

இரா.முத்தரசன்:

நாடு தழுவிய அளவில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வலுப் படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருக்கும் திமுக ஆட் சிக்கும், பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றிய பிகார் முதல மைச்சர் நிதீஸ் குமார் ஆட் சிக்கும்  நெருக்கடி ஏற்படுத்தும் நோக்கத்துடன், வட மாநிலத் தொழிலாளர் தொடர்பாக வதந்திகள் பரப்பப் படுகின்றன. இது போன்ற சட்ட விரோதச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். தமிழ் நாடு மக்கள் ஒன்று பட்டு, சமூகவிரோத சக்திகளை முறியடிக்க வேண்டும். 

மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது போல  சில காட்சிப் பதிவுகளை முன்வைத்து, பாஜக வினர் பீகார் சட்ட மன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள் ளனர். அது மட்டுமின்றி பிரசாந்த் உம்ராவ் என்கிற பாஜகவின் உத்தரப் பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் 12 பீகார் தொழிலாளர்கள் தமிழ் நாட்டினரால் கழுத்தறுத்து படு கொலை செய்யப்பட்டதாக ஒரு வதந்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதையே பல்வேறு தரப் பினருக்கும் பகிர்ந்துள்ளார். இதே போன்று மிக அதிக விற்பனை கொண்ட வட இந்திய பத்திரிகையும் இத்த கைய செய்திகளை வெளியிட்டுள்ளது. இதை யொட்டி பீகாரிலும் தமிழ்நாட்டிலும் பதட்ட மான சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஜகவினர் பரப்பும் காட்சிப் பதிவுகள் தமிழ்நாட்டில், அய்தரா பாத்தில், ராஜஸ்தானில் நடந்த தனி நபர் மோதல்கள் மற்றும்  தமிழ்நாட் டிலேயே வடமாநி லத்தைச் சார்ந்த இருபகுதி ஊழியர் களுக்குள் நடந்த மோதல்தான் என்று ஆதாரங்களோடு கிறீt ழிமீஷ்s என்கிற உண்மை கண்டறியும் இணையதளம் தெளிவுபடுத்தி இருக் கிறது.

வெறுப்பு அரசியலை மூலதன மாக்கும் சங் பரிவாரம், இசுலாமி யர்கள், கிருத்தவர்கள் என்று ஆரம் பித்து தற்போது இரண்டு மாநிலங் களுக்கு இடையே வெறுப் புணர்வை ஏற்டுபத்தி குளிர்காய முயற்சித் திருக்கிறது.

தமிழ்நாடு அரசும் காவல்து றையும் வதந்தி பரப்பியோர் மீதும், வெறுப்பைத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண் டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு வலியுறுத் துகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்:

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக் கப்படுவதாக பொய்யான செய்தியைப் பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதை வரவேற் கிறோம். 

இது திட்டமிட்ட பயங் கரவாத சதி என்பதால், பின்னணியில் உள்ள அனைவர் மீதும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரம், வடமாநிலத் தொழிலா ளர்களின் பாதுகாப்பையும், அவர்களது உரிமைகளையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர் பான சமீபத்திய வதந்திகள், மொழி அடிப்படையில் வெறுப்பு, அமைதி யின்மை, வன்முறையைப் பரப்புவ தற்கான முயற்சிகளாகும்.

இதில் தொடர்புடையவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்க முயற் சிக்கும் நபர்கள் மீது தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment