நிலக்கரி நிறுவனத்தில் 330 பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

நிலக்கரி நிறுவனத்தில் 330 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சென்ட்ரல் கோல்டு பீல்டுஸ் நிறுவனத்தில் (சி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : மைனிங் சிர்தார் 77, எலக்ட்ரீசியன் டெக்னீசியன் 126, துணை சர்வேயர் 20, அசிஸ்டென்ட் போர்மென் (எலக்ட்ரிக்கல்) 107 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : அசிஸ்டென்ட் போர்மென் (எலக்ட்ரிக்கல்) பிரிவுக்கு டிப்ளமோ, மற்ற பிரிவுக்கு பிளஸ் 2 படிப்புடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : 19.4.2023 அடிப்படையில் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 19.4.2023

விவரங்களுக்கு:  centralcoalfields.in...

No comments:

Post a Comment