'தினமலர்' அந்துமணிக்கு சாட்டை - ம.சுப்பராயன், தலைவர், கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

'தினமலர்' அந்துமணிக்கு சாட்டை - ம.சுப்பராயன், தலைவர், கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்

கருப்புச்சட்டை என்ன சாதித் தது என்று கேட்கும் தினமலர் அந்துமணியே சொல்கிறேன் கேள்!

உங்கள் வீட்டுப் பெண்கள், முன்பெல்லாம் கணவனை இழந்த பின் முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தார் களே! அந்த நிலை இப்போது உண்டா? அவர்களெல்லாம் மறு மணம் செய்துகொண்டு சுயமரியா தையுடன் இன்று வாழ்வதற்கு பெரியாரின் கருப்புச்சட்டைதானே காரணம்? 

இதற்கெல்லாம் தொடர்ந்து ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண் டிருக்கும் எங்கள் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தானே காரணம்? உங்களால் இதனை மறுக்க முடியுமா?

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த எங்களின் நீதிபதிகளைப் பார்த்து "மை லார்ட்" என்று உங் களின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் இறைஞ்சுகிறார்களே. இதற்கெல் லாம் யார் காரணம்? உலகத் தலை வர் பெரியாரின் கருப்புச்சட்டையும் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் கருப்புச்சட்டையும் தானே காரணம்?.

கருப்புச்சட்டை என்ன சாதித் தது? என்று கேட்கும் தினமலரின் அந்துமணியே வாலைச் சுருட்டிக் கொள்!

No comments:

Post a Comment