வாயில்லா ஜீவன் என்று கூறவேண்டாம் தாவரங்களும் உரையாடுகின்றன, அவற்றிற்கும் பேசும் திறன் உண்டு - டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 6, 2023

வாயில்லா ஜீவன் என்று கூறவேண்டாம் தாவரங்களும் உரையாடுகின்றன, அவற்றிற்கும் பேசும் திறன் உண்டு - டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு

புயல் வந்தாலும், தீ பரவினாலும், பசித்தாலும் குரல் எழுப்பமுடியாமல் இருப்பது செடிகள் என்று எண்ண லாம்.

ஆனால் தாவரங்களும் தங்களின் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்த வேறுபாடான ஓசை களை எழுப்புகிறது என்று ஆய் வொன்றில் தெரியவந்துள்ளது. ஆனால். மிகவும் அதிகமான அதிர்வெண் கொண்ட  அந்த ஓசையை மனிதர்கள் கேட்க முடியாது என்றும் அதன் ஒலி அலைகளை பதிவு செய்து அதனை மனிதர்கள் கேட்கும் விதமாக வெளியிட ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அறிவியல் ஆய்விதழ் ஒன்றில் வெளியான கட்டுரையில் இந்த ஆய்வு குறித்த முடிவுகள் வெளி யாகி உள்ளது இதில் செடிகள் வெளியிடும் ஒலியின் அதிர்வெண் மிகவும் அதிகம் என்றும் மனிதச் செவியால் அதை உணரமுடியாது என்றும் கூறப்பட்டது. பூச்சிகளும் சிலவகை விலங்குகளும் மட்டுமே அந்தச் சத்தத்தைக் கேட்கமுடியும்.

ஆய்வில் தக்காளி, புகையிலை, கோதுமை, சோளம், கற்றாழை ஆகிய செடிகள் சோதிக்கப்பட்டன. சிலவற்றுக்குத் தண்ணீர் அளிக்கப் படவில்லை. சிலவற்றுக்குத் தண்டு அகற்றப்பட்டது. தேவைகள் இல்லா மல் இருந்த செடிகள் அவ்வளவாக ஒலி எழுப்பவில்லை என்றும் அதே நேரத்தில் நீர் மற்றும் இதர தேவை கள் கிடைக்காத தாவரங்கள் ஒலி எழுப்பிக்கொண்டே இருந்தன என் றும் கூறப்பட்டது. வெளியிடப்படும் ஒலி செடி வகைக்கு ஏற்றவாறு மாறியதாக ஆய்வாளர்கள் கூறினர்.

"உலகமே செடிகளின் சத்தத்தால் நிரம்பியிருக்கிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை, சேதம் ஆகியவை குறித்த தகவலைச் சத்தம் வழங்கு கிறது," என்று இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல், உணவு பாதுகாப்புப் பள்ளியின் பேராசிரியர் லிலேக் ஹதானி(Lilach Hadany) கூறினார். இனிமேல்  வருங்காலத்தில் தாவரங் களோடும் மனிதர் உரையாடும் சூழல் ஏற்படும். இதன் மூலம் மனிதர்களின் வளர்ப்புப் பிராணிக ளோடு வளர்ப்பு தாவரங்களோடும் மனிதர்கள் பேச  வழி கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment