கலாசேத்ரா மாணவிகள் பிரச்சினை - மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

கலாசேத்ரா மாணவிகள் பிரச்சினை - மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை, ஏப். 5- சென்னை திருவான்மியூரில் உள்ள கலா சேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாணவிகள் போராட்டம் நடத்தினர். காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

மாணவிகளின் புகார் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த புகார் தொடர்பாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி, அந்தக் கல்லூரி மாணவிகளி டம் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் குமாரி நேற்று மாலை தலைமைச் செயலகத்திற்கு வந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவை சந்தித்து பேசினார். அப்போது 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட விசாரணை அறிக்கையை தலைமைச் செயலாளரிடம் குமாரி கொடுத்தார்.

இதுபற்றி குமாரியிடம் கேட்ட போது, பாலியல் புகார்கள் தொடர்பாக இதுவரை நடத்தப் பட்ட விசாரணையை அறிக் கையாக தயாரித்து தலைமைச் செயலாளரிடம் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment