காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் திராவிட மாணவர் கழக அணி தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 28, 2023

காரைக்குடி அரசு சட்டக் கல்லூரியில் திராவிட மாணவர் கழக அணி தொடக்கம்

காரைக்குடி, ஏப். 28- காரைக்குடி கழக மாவட்டம் வைரவபுரம், நேரு நகர், கார்த்திக் வளாகத் தில் ஏப்ரல் 26 மாலை 4.30 மணி அளவில் திராவிட மாண வர் கழகத்தின் சார்பில் சந்திப் போம்! சிந்திப்போம்! நிகழ்வு  திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரப் பாண்டியன் தலை மையில், காரைக்குடி மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட் டச் செயலாளர் ம. கு.வைகறை முன்னிலையில் நடைபெற்றது.

திராவிட மாணவர் கழகத் தில் புதிதாய் இணைந்துள்ள சட்டக் கல்லூரி மாணவர்களி டையே திராவிட மாணவர் கழகத்தின் நோக்கம், அறிவா சான் பெரியார் ஆற்றிய சமு தாயப் பணி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூக நீதிப் போராட்டங்கள் பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார் மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன்,  சந் திப்பில் கலந்து கொண்டு உரை யாற்றிய கழகப் பொறுப்பா ளர்கள்: 

காரைக்குடி நகரத் தலைவர் ந.ஜெகதீசன், நகரச் செயலாளர் தி.கலைமணி, கழக சொற் பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட அமைப் பாளர் சி.செல்வமணி, மாவட்ட துணைச் செயலாளர் இ.ப. பழனி வேல்.

காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக 

புதிய பொறுப்பாளர்கள்

சிவகங்கை மண்டல மாண வர் கழக செயலாளர் செ. வெற் றிச்செல்வன், தலைவர்: அ.சிவா, செயலா ளர்: வே.அஜய், அமைப்பாளர்: தி.திவ்யன்.  

தீர்மானங்கள்: 

1. ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று கோவையில் நடை பெறும் திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் திரளாக சென்று பங்கேற்பது எனவும்,  

2. மே திங்களில் காரைக் குடியில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக் கப்பட்டது.

விழுப்புரம் வீ.வேணு கோபால், கோவில்பட்டி வே.ராமச்சந்திரன், அம்பா சமுத்திரம் மா.சுரேஷ் கண் ணன், வந்தவாசி தா.சித்தார்த், சிதம்பரம் தி.சந்துரு, திருச்சி அஜய், திருவானைக்கோவில் மோகன் குமார், உறையூர் கண் ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வை சிறப்பாக ஒருங்கி ணைத்த மண்டல மாணவர் கழக செயலாளர் செ. வெற்றிச் செல்வன் நன்றி கூற இனிதே நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment