சென்னை, ஏப். 28- திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் சர். பிட்டி. தியாகராயர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர். பிட்டி. தியாகராய ரின் பிறந்த நாளை முன் னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த் துச் செய்தியில்,"திராவிட வீரனே விழி, எழு, நட!" எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்த நாள்! மாணவர்க்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர்! அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம்! தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப் போம்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Friday, April 28, 2023
வெள்ளுடை வேந்தர் தியாகராயர் வழியில் நடை போடுவோம்: முதலமைச்சர் சூளுரை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment