சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தின்மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்திய தமிழர் தலைவருக்கு நன்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தின்மூலம் மக்களிடையே விழிப்பை ஏற்படுத்திய தமிழர் தலைவருக்கு நன்றி

நெடுவாக்கோட்டை கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

நெடுவாக்கோட்டை, ஏப். 8- உரத்நாடு ஒன்றியம், நெடுவாக்கோட்டை, மண்டலக் கோட்டை திராவிடர் கழக கிளை கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 4.4.2023 செவ்வாய் மாலை 8 மணி யளவில் நெடுவாக்கோட்டை தோ.தம் பிக்கண்ணு இல்லத்தில் நடைபெற்றது. 

நெடுவை கிளைச் செயலாளர் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார். 

மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் இயக்க செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்பு குறித்து தொடக்கவுரையாற்றினார்,

தொடர்ந்து ஒன்றிய ப.க தலைவர், கண்ணந்தங்குடி கீழையூர் கிளைக்கழக தலைவர் இரா.செந்தில்குமார், நகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் மாரிமுத்து, மண்டலக் கோட்டை செந் தில்குமார் உரத்தநாடு நகரத்தலைவர் , ஒன்றிய அமைப்பாளர்    பு.செந்தில்குமார்  ,மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல் , மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திரா பதி,ஒன்றியத்தலைவர்   த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் கோவிலூர் சதீஷ், பெரியார் பெருந்தொண்டர் நெடுவாக்கோட்டை தோ,தம்பிக்கண்ணு கழக செயல்பாடு கள் குறித்து உரையாற்றினார்கள்,

மாவட்டச்செயலாளர் அ.அருண கிரி, மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சியடையும்  வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர்  இயக்கத்தின் கட்டுப்பாடுகள் குறித்தும் கொள்கை தலைமையை முன்னிறுத்தி கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என வும் உரையாற்றினார்.

கழக பிரச்சாரம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்புகள், கழகத்தோழர்கள் அர்ப்பணிப்பு உணர் வு டன் செயல்பட வேண்டியதின் அவ சியம் குறித்து கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இறுதியாக உரை யாற்றினார்.

தெற்கு நத்தம் க.சசிக்குமார், தெற்கு நத்தம் நாகராசு  தந்தையார் சிவஞானம், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன் தந் தையார் நாராயணன், தலையாமங்கலம் இராமதாஸ் தந்தையார் தங்கையன், மண்டலகோட்டை ஞானம்  தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 4 கட்டங்களாக தமிழ்நாடு, புதுவை இரண்டு மாநிலங்களில் 30 நாட்கள்  57 பொதுக்கூட்டங்களில் உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திய தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது.

தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனை கூட்டங் களை கிளைகள் தோறும் நடத்துவது

புதிய உறுப்பினர்களை சேர்த்து  கழக அமைப்புகளை புதுப்பிப்பது,

விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது,

ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது

என முடிவு செய்யப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள உரத்தநாடு வட்டத்தில்  11 கிராமங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது உரத்தநாடு  மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளார்கள்   மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்  இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.

நெடுவாக்கோட்டை திராவிடர் கழகத்தினரால் இடம் வழங்கப்பட்டு அந்த இடத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தந்தை பெரியார் பெயரை சூட்டிட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

No comments:

Post a Comment