‘திராவிடர் இயக்கமும் மகளிர் புரட்சியும்’ தலைப்பில் ​அலங்காநல்லூரில் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 5, 2023

‘திராவிடர் இயக்கமும் மகளிர் புரட்சியும்’ தலைப்பில் ​அலங்காநல்லூரில் பொதுக்கூட்டம்

மதுரை,ஏப்.5- மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக அன்னை மணியம்மையார் பிறந்த நாள், உலக மகளிர் நாளை யொட்டி 'திராவிடர் இயக்கமும் மகளிர் புரட்சியும் 'என்னும் தலைப் பில் பொதுக்கூட்டம் 31.3.2023 வெள்ளிக்கிழமை மாலை அலங்கா நல்லூர், மந்தைத் திடலில் நடை பெற்றது.

நிகழ்வுக்கு வந்திருந்த அனை வரையும் வரவேற்று பகுத்தறிவா ளர் கழக மாவட்டத்தலைவர் ச.பால் ராஜ் உரையாற்றினார்.

இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட திராவி டர் கழக மகளிர் அணி தலைவர் பெ.பாக்கியலட்சுமி தலைமை தாங்கி உரையாற்றினார். 

அவர் தனது உரையில் 'திரு மணத்திற்கு முன் தந்தை பெரியார் பற்றி,அவரின் கொள்கைகள் பற்றித் தெரியாது.நான் நிறையப் படிக்கவில்லை,2-ஆம் வகுப்புவரை தான் படித்தேன்.எனது கணவர் ,ஆட்டோ டிரைவர் பெரியசாமி தான் எனக்கு தந்தை பெரியார் பற்றியும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பற்றியும் சொல்லிக் கொடுத்து, கொள்கைத் தெளிவு ஏற்படுத்தினார். நான் படிக்க வில்லை. ஆனால் என் மகளை எவ்வளவு படிக்கவைக்க முடியுமோ அவ்வளவு படிக்கவைப்பேன். 

அன்னை மணியம்மையார் அவர்கள் பெண்கள் படிக்கவேண் டும் என்று சொல்லியிருக்கிறார்கள் " எனக்குறிப்பிட்டு அன்னை மணியம்மையார் அவர்களைப் பற்றிப் பல தகவல்களைக் குறிப்பிட்டு சிறப்பாகப் பேசினார்.

மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை, மாவட்டச் செயலாளர் பா. முத்துக்கருப்பன் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்ததோடு முன் னிலை ஏற்று  உரையாற்றினர்.

பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநில மகளிரணி - மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி, 

உயர் கல்வி விகிதத்தில் எப்படி மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதையும், 2035இல் ஒன்றிய அரசு அடைய நினைக்கும் 50 சதவீத உயர்கல்வி சதவீதத்தை இப்போதே தமிழ்நாடு அடைந்து விட்டதையும்,அதற்குக் காரணம் தந்தை பெரியாரும் திராவிட இயக்க ஆட்சிகளும் எனக்குறிப் பிட்டு புள்ளி விவரங்களோடு பொதுமக்களுக்கு விளக்கினார்.

பெண்கள் உரிமை என்று வரு கின்றபோது அன்னை மணியம் மையார் அவர்கள் எப்படியெல் லாம் போராடினார்கள், தீரமிக்க தலைவராக அனனை மணியம் மையார் எப்படியெல்லாம் தலை மைப் பொறுப்பு ஏற்று பணியாற்றி  னார்கள் என்பதனை விவரித்தார்.

90 வயதிலும் அயராது உழைத் துக்கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களின் இடைவிடாத பணியை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று செயல்பட வாருங்கள்  எனப் பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் எனத் திராவிட இயக்க ஆட்சியில் இயற்றப்பட்ட பெண் ணுரிமைச் சட்டங்களை எடுத்து ரைத்தார். திராவிட மாடல் ஆட்சி யில் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எப்படிப்பட்ட திட்டங்கள் எல் லாம் கொண்டுவந்திருக்கிறார்கள், பெண்கள் மேம்பட  பெண்களுக்கு இலவசப் பேருந்து, கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ 1000 மாதந்தோறும் உதவித்தொகை எனப் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி மிகச்சிறப்பாக 1 மணி நேரத்திற்கு மேலாக  உரை யாற்றினார்.

நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தா ளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு, திராவிடர் கழக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் கவிஞர் சுப.முரு கானந்தம், மண்டலச்செயலாளர் ந.முருகேசன், மண்டலத்தலைவர்  கருப்பட்டி கா.சிவகுருநாதன், பொதுக்குழு உறுப்பினர் அ.மன் னர் மன்னன், மாவட்ட அமைப் பாளர் ரோ.கணேசன், பேரையூர் நகரச்செயலாளர் பாண்டியராசன், பெரியசாமி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் வழக்குரைஞர் இராம.வைரமுத்து, இந்திய தேசிய  காங்கிரஸ் கட்சியின் சுப்புராயல், காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் ஊர் சேரி சிந்தனைவளவன், பேரா.ஸ்டாலின், அதிவீரபாண்டியன், ஆதி தமிழர் பேரவை பொறுப்பா ளர் தமிழ்க்குமரன், தமிழ்ப்புலிகள் பொறுப்பாளர் சிங்கப்பாண்டி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ந.மணிகண்டன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.பாலா நன்றி கூறினார்.

No comments:

Post a Comment