ஒசூரில் ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

ஒசூரில் ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் போராட்டம்

ஒசூர் பாகலூர்-பெலத்தூரில் உள்ள ஏசியன் பேரிங் நிறுவன தொழிலாளர்கள்  கடந்த 17 ஆண்டுகளாக நிறுவன கதவடைப்பை நீக்கக்கோரியும், வேலை செய்த நாட்களுக்கு ஊதியம் வேண்டியும், மேற்கண்ட பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டி சென்னை கோட்டை நோக்கி ஏசியன் பேரிங் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் கிறிஸ்து நேசன் தலைமையில் நடைப்பயணம் நடைபெற்றது. இதில் ஒசூரில் உள்ள பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திராவிடர் தொழிலாளரணி மாவட்டச் செயலாளர் பா.வெற்றிசெல்வன், மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு நோக்கம் நிறைவேற ஆதரவினைத் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment