மேலும் வலுக்கிறது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - விவசாயிகள் ஆதரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

மேலும் வலுக்கிறது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - விவசாயிகள் ஆதரவு!

புதுடில்லி, மே 9 - மல்யுத்த வீரர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கங்களின் கூட்ட மைப்பான, 'சம்யுக்த கிசான் மோர்சா' ஆதரவு தெரிவித்து இருப்பதைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேள னத்தின் தலைவரும், பா.ஜ.,  நாடா ளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது, மல்யுத்த வீராங்கனையர் ஏழு பேர் பாலியல் புகார் தெரிவித்தனர். அவர் மீது புதுடில்லி காவல்துறை இரண்டு வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் சிங்கை பதவி நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் வலியுறுத்தி, புது டில்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பா.ஜ.வைச் சேர்ந்த அரியானா உள் துறை அமைச் சர் அனில் விஜ், மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வீரர்கள் விரும் பினால், அவர்கள் தரப்பில் இருந்து ஒன்றிய அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித் தார்.

இந்நிலையில், விவசாய சங்கங் களின் கூட்டமைப்பான, 'சம்யுக்த கிசான் மோர்ச்சா' அமைப்பினர், மல்யுத்த வீரர்களின் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பஞ்சாப், அரியானா, புதுடில்லி, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள், ஜந்தர் மந்தருக்கு வந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுடில்லி எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ அமைப் பினர் தான் ஒருங்கிணைத்தனர்.

இப்போது, மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இவர்கள் களம் இறங்கி இருப்பதால், ஜந்தர் மந்தரில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment