மணிப்பூரில் ரயில் சேவைகள் நிறுத்தி வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 6, 2023

மணிப்பூரில் ரயில் சேவைகள் நிறுத்தி வைப்பு

இம்பால், மே 6- மணிப்பூரில் நடைபெறும் கலவரம் காரணமாக அம்மாநிலத்தில் அனைத்து ரயில் சேவை களும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த 3.5.2023 அன்று மணிப்பூர் மாநிலத்தில் மேதே சமூகத்தினரைப் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிப்பூர் பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில், 10 மலைப் பிரதேச மாவட்டங் களில் நடந்த ‘பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியில் மோதல் ஏற்பட்டது.  வேகமாக இது குறித்த தகவல் பரவியதால், அண்டை மாவட்டங்களில் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  பல இடங்களில் மேதே சமுதாயம் மற்றும் பழங்குடியின மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.

மணிப்பூர் மாநிலம் முழுவதும் ஏராளமான கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டு தர்பங் பகுதி யில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வன்முறை நீடித்தது. அம்மாநில காவல்துறையால் வன்முறையைக் கட்டுப் படுத்த முடியவில்லை.  இதையொட்டி, ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையினர் உடனடியாக கலவரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் 9 ஆயிரம் காவல்துறையினரை மீட்டு, பாது காப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலை யில், மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு கல்வி நிலையங் களில் படிக்கும் மேகாலயா மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி மாநில அரசு அதிகாரிகளுக்கு மேகா லயா முதல்வர் கன்ராட் கே சங்கம் உத்தரவிட்டுள்ளார்.

4.5.2023 அன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு கலவரக்காரிகளைக் கண்டதும் சுட உத்தர விட்டிருந்தது.  இக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட 9 ஆயிரம் பேர் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினரால் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.  ஆயினும் இறந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.  இந்த நிலையில் அம்மாநிலத் திற்குச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப் பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.

பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலே  

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம்!

இம்பால், மே 6- மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக-தான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

 “மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தவும், இயல்பு நிலைக்கு மாநிலம் திரும்பவும் தேவையான நடவடிக் கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என ராகுல் காந்தி டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. அழகான அந்த மாநிலத்தில் சமூகங்களுக்கு இடையே பாஜக பிரிவினையை ஏற்படுத்தி, அமைதியை அழித்து விட்டது. பாஜக-வின் வெறுப்பூட்டும் பேச்சு, மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நடவடிக்கை, அதிகாரத்தின் மீது அதற்கு இருக்கும் பேராசை ஆகியவையே கலவரத்திற்கு காரணம். மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment