கருநாடகத்தில் பாஜக ஆட்சியில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 10, 2023

கருநாடகத்தில் பாஜக ஆட்சியில்

40% கமிஷன்: ஒப்பந்ததாரர்கள் பரபரப்பு அறிக்கை

பெங்களூரு, மே 10  கருநாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்குப் பெறப்பட்ட 40% கமிஷனால் பல உயிர்கள் பறிபோய்விட்டன. கருநாடகத்தில் மக்கள் உயிருக்கு ஆபத்தான கட்டமைப்புகளில் வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனசாட்சிப்படி வாக்களித்தால் மட்டுமே ஜனநாயகம் மலரும். கருநாடகத்தில் பெருகிவிட்ட ஊழல் அனைவரது மனசாட்சியையும் காயப்படுத்தி இருக்கிறது. 

கருநாடக பாஜக அரசை '40% கமிஷன் அரசு' என்று காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. தேர்தல் பிரச்சாரங்களிலும் பாஜகவுக்கு எதிரான முக்கிய விமர்சனங்களாக 40% கமிஷன் குற்றச்சாட்டு இடம்பெற்றது. 

இன்று (10.5.2023) கருநாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒப்பந்ததாரர்கள் 40% கமிஷனை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.

No comments:

Post a Comment