அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 22ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 22ஆம் தேதி இதய அறுவைச் சிகிச்சை

சென்னை,ஜூன்19- அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன் னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது. அப்போது அவரது இதய ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. எனவே உடனடியாக பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப் பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் குழுவினர் பரிசோதித்தனர். அடுத்தகட்டமாக வழங்கப் படும் சிகிச்சைகள் தொடர்பாகவும் ஆலோசித்துவந்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் குழுவினரின் தீவிர கண் காணிப்பிலேயே செந்தில் பாலாஜி இருந்துவருகிறார்.

அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ள நிலையில், அவரது உடல்நலனை கருத்தில்கொண்டு அவருக்கு உடனடியாக பைபாஸ் இதய அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுக்கப் பட்டது. அதன்படி, வருகிற 22ஆம் தேதி (வியாழக்கிழமை) செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற் கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது செந்தில் பாலாஜி 'பிளட் தின்னர்' எனும் ரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை உட்கொண்டு வருகிறார். அந்த மருந்துகளை குறிப்பிட்ட நாட்களுக்கு எடுத்துக்கொண்டாக வேண்டும் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில்கொண்டுதான் 22ஆம் தேதியை அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது.

அறுவை சிகிச்சை முடிந்த பின்பு, அமலாக்கத்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்நேரமும் ஆஜராக வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. தற்போது வரை அவர் தீவிர கண்காணிப்பில் இருப்ப தாகவும், அவர் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதேவேளை, காவேரி மருத்துவமனையில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது.


No comments:

Post a Comment