ஜூன் 25 செந்துறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

ஜூன் 25 செந்துறையில் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திட ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு

செந்துறை, ஜூன் 13- செந்துறை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 9.6.2023 அன்று மாலை 6 மணியளவில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் செந் துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது. மு.முத்தமிழ்ச்செல்வன் கடவுள் மறுப்பு கூறினார். ஒன்றிய செயலாளர் ராசா.செல்வ குமார் அனைவரையும் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் சி. காமராஜ் கழக காப்பாளர் சு.மணி வண்ணன் மாவட்ட அமைப்பாளர் ரத்தின. ராமச் சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் மாவட்ட துணைச் செயலாளர்கள் மா.சங்கர், பொன்செந்தில்குமார் ஆகியோர் முன் னிலையேற்று கருத்துரை வழங்கினார்கள்.

மாவட்ட செயலாளர் க.சிந்தனைச்செல்வன் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கியும் பயிற்சி முகாம் சிறப்பாக நடத்திடுவது குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். நகர தலைவர் ப.இளங் கோவன் நன்றி கூறினார்.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் அரசமைப்புச் சட்டத்தை எரித்து 18 மாதம் சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர் தத்தனூர் சா.துரைக்கண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், அனைத்து கிராமங்களிலும் கிராம பிரச்சாரக் கூட் டங்களை நடத்துதல், செந்துறையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்தல் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

புதிய பொறுப்பாளர்கள்

செந்துறை ஒன்றியம்

அமைப்பாளர்: சோ.க. சேகர்.ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர்: பெ.கோ.கோபால்.

ஒன்றிய இளைஞர் அணி தலைவர்: மு. ரஜினி காந்த், 

செயலாளர்: செ.ரகுபதி,

துணைத் தலைவர்: பரணம் ராமதாஸ்

துணைச் செயலாளர்: கோ. பால்ராஜ் 

அமைப்பாளர்: ஆர் தினேஷ் 

ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்: 

இரா. அருள்

செயலாளர்: ம. சிந்தனைச்செல்வன்,

அமைப்பாளர்: மு.தமிழறிவாளன்

துணைத் தலைவர்: விமல்ராஜ் 

துணைச் செயலாளர்: பெரியார் செல்வன் 

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா. மதியழகன், செய லாளர் வெ. இளவரசன், அமைப்பாளர் சி.கருப்பு சாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.இளவழகன், ஒன்றிய துணைத் தலைவர் வை.சுந்தரவடிவேலு, மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ.தமிழரசன், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் திராவிட வித்து, பெரியாக்குறிச்சி சோ.க.சேகர், பெ.கோ.கோபால், அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பராயன், இளை ஞரணி நிர்வாகிகள் ரஜினிகாந்த் சரண், சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment