இயக்கத்தின் வலிமை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

இயக்கத்தின் வலிமை!

"பெரியாரியல் பயிற்சிப் பட்ட றைகள்" தமிழ்நாடு முழுவதும் நடை பெற்று வருகின்றன! அதனையொட்டி 10.06.2023, சனிக்கிழமை தஞ்சாவூரில் நடைபெற்றது. பெரும் திரளாக 95 மாணவர்கள் கலந்து கொண்டனர்!

இந்நிகழ்வில் சமூகநீதி வரலாறு எனும் தலைப்பில் உரையாற்ற வந்த திராவிடர் கழக மாநில வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள், "ப்ரொஜெக்டர்" (Projector) வாயிலாக இட ஒதுக்கீடு தொடர்பாகப் புள்ளி விவரங்களுடன்‌ பேசினார்.

பிறகு அவர் என்ன நினைத்தாரோ  தெரியவில்லை... தொடர்ந்து பெரியா ரியல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் போது புரொஜெக்டர் தேவைப்படுமே என்பதைக் கருத்தில் கொண்டு, நான் ஒரு "ப்ரொஜெக்டர்" வாங்கித் தருகிறேன் எனப் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமாரிடம் தெரிவித்தார்.

அடுத்த அய்ந்தாவது நிமிடம் விலைப்புள்ளி (Quotation) பெறப்பட் டது. நிறுவனப் பெயர் (Brand Name) விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது மணி நேரத்தில் "ப்ரொஜெக்டர்" கைக்கு வந்துவிட்டது!

அடுத்த நாளில் (11.06.2023) நீடா மங்கலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இந்த "ப்ரொஜெக்டர்" கருவியைத் தொடங்கி வைத்தார்.

"பெருமை நிரம்பிய மனிதர்களே, மக்கள் சமுதாயத்தின் மைல் கற்கள்!"

- வி.சி.வில்வம்


No comments:

Post a Comment