பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் அழைப்பாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

பிஜேபி தலைவர் அண்ணாமலைக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஆலந்தூர், ஜூன் 18 - தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தி.மு.க பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த நிலையில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 1957-ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். நாடாளுமன்ற உறுப் பினராகவும், ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன். எனக்கு சமுதாயத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் நற் பெயரும், மரியாதையும் உள்ளது. அதை சீர்குலைக்கும் விதமாக களங்கம் ஏற்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார். எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டி யுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில் 3 நிறு வனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை.

பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அண்ணாமலை எனக்கு நட்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந் தார். கடந்த 9-ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமுலம் அளித்தார். இந்த நிலையில் மனு மீதான விசாரணை 17-ஆவது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில் ஜூலை மாதம் 14-ஆம் தேதி அண்ணாமலை நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது


No comments:

Post a Comment