அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிக்க முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிக்க முடிவு!

 திருவாரூர் மாவட்டம். கொரடாச்சேரி ஒன்றிய 

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர், ஜூன் 12 திருவாரூர் மாவட்டம், கொர டாச்சேரி ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் பருத்தியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் 10.6.2023 காலை 10.30 மணியளவில் ஒன்றிய தலைவர் தங்க.கலிய பெருமாள் தலைமை யிலும், மாநில விவசாய தொழிலாளரணி செய லாளர் க.வீரையன். மாவட்ட செயலாளர் வீர.கோவிந்தராஜ் மேனாள் மாவட்ட தலைவர் மு.சரவணன், மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் பி.ரெத்தினசாமி இவர்கள் முன்னிலை யிலும் திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன் அவர்கள் நோக்க உரையாற்றிட, மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி சிறப்புரையாற்றினார். ஏராளமான கழகத் தோழர் கள் கலந்துகொண்டனர்.

நிறைவாக ஒன்றிய செயலாளர் சி.ஏகாம்பரம் அவர்கள் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்

பருத்தியூர் அம்சவல்லி, மீனாட்சி, மா.கோவிந்த ராசு மு.செல்வம், குதம்பநயணார்கோவில் குரு மூர்த்தி, முத்துலட்சுமி, விடையபுரம் கருப்பையன் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் இக்கூட்டம் தெரிவிக்கிறது.

தீர்மானம் எண் 2:

தந்தை பெரியார் மனித உரிமை போர் வைக்கம் நூற்றாண்டு விழா - நீதிக் கட்சி நூற்றாண்டு விழா - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில். கிராமம் கிராமமாக வெகு விமரி சையாகவும், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

அனைத்துப் பகுதிகளிலும் புதிய உறுப்பினர் களை சேர்த்து கழக அமைப்பை புதுப்பிப்பது எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4:

‘விடுதலை' சந்தாக்களை புதுப்பித்து சந்தாக் களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5:

கழகப் பொதுக்குழு தீர்மானங்களை நிறை வேற்றுதல் எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 6:

 திருவாரூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழுவதும் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துவது எனவும், பயிற்சி பட்டறைக்கு கொரடாச்சேரி ஒன்றியம் சார்பாக 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி களையும் பங்கேற்க செய்வது எனவும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7:

 செப்டம்பர் 17 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகலமாக கொரடாச்சேரி ஒன்றியம் கிளைக் கழக வாரியாக தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment