பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு

கும்பகோணம்,ஜூன்15- கும்பகோணம் ஒன்றியம்- தாராசுரம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் வை.கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12.06.2023 அன்று காலை பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கீழ்க்கண்ட மாணவ-மாணவிகளுக்கு கேடயமும் தந்தை பெரியார் நூல்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்ற முதல் மூன்று மாணவர்கள்-

என். திவ்யா, எஸ். அஸ்வர்யா, 

கே.காவிய ஈஸ்வரி.

பதினோராம் வகுப்பில் தேர்வு பெற்ற முதல் மூன்று மாணவர்கள்-

ஏ.அரிப்பிரியா, பி .கணேஷ், எஸ்.கமலேஸ்வரி.

12ஆம் வகுப்பில் தேர்வு பெற்ற முதல் மூன்று மாணவர்கள்-

எம்.பிரியங்கா காந்தி, வீ.லோகேஸ் வரி, எம். பரணிதரன்.

தந்தை பெரியாரின் நூல்கள் பெரி யார் பெருந்தொண்டர், பொதுக்குழு உறுப்பினர், தாராசுரம் வை.இளங் கோவன் மற்றும் செல்லதுரை, ஜனார்த் தனன், சிறைவாணி, டயானா குடும்பத் தினரால்  வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா. அசோக்குமார் மற்றும் திராவிடர் கழகத் தின் மாநில அமைப்பாளர் குடந்தை 

க.குருசாமி, தலைமை ஆசிரியை ப்ரீத்தி ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி உரையாற்றினார்கள்.

தமிழாசிரியர் சேகர், இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர் கள் கலந்து கொண்டார்கள்.

பத்து மற்றும் பனிரண்டாம் வகுப்புகளில் (2022 - 2023) ஆண்டு 94 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பதாக தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

இந்த பள்ளியில் ஆண் குழந்தை களைவிட பெண் குழந்தைகள் அதிக மாக சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment