இந்து அற நிலையத்துறையின் கோயில் தனியாருக்கு மாறியது எப்படி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

இந்து அற நிலையத்துறையின் கோயில் தனியாருக்கு மாறியது எப்படி?

சென்னை - 600075, மூங்கில் ஏரி, பம்மலில் உள்ள சிறீ முத்துமாரியம்மன் கோயில் (இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரின் செ.மு.ந.க. எண் 4254/2013/அ/நாள் 1.7.2014)  இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டுக்குள் வந்தது.

அதற்கான விளம்பரப் பலகையும் கோயிலில் வைக்கப் பட்டது. ஆனால் அந்த விளம்பரப் பலகை அப்புறப்படுத் தப்பட்டு பிஜேபியினர் கோயிலைக் கைப்பற்றியதுடன், பழைய கோயிலையும் இடித்து விட்டு, பண வசூல் செய்து புதிதாகக் கோயிலைக் கட்டி வரும் 25.6.2023 அன்று புனராவர்த்தன, ஜீர்னோதாரன, அஷ்டபந்தன மஹா கும்பா பிஷேக விழா நடைபெற உள்ளது என்று அழைப்பிதழும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அழைப்பவர்கள் யார்? எந்த அமைப்பு என்று இல்லாமல் மொட்டையாக அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து  இ.கலாதேவி என்பவர் இந்து அறநிலையத் துறை  ஆணையர்க்குப் புகார் கொடுத்துள்ளார்.

இந்தப் புகாரின்மீது காஞ்சிபுரத்தில் உள்ள இந்து சமய  அறநிலையத்துறை இணை ஆணையருக்கு  இந்து அற நிலையத்துறை ஆணையரால்  (ந.க. எண் 28308/2023/ நாள்: 29.5.2023) மிக அவசரம் என்ற தலைப்பிட்டு விசாரித்து ஒரு வார காலத்துக்குள் விரிவான அறிக்கை  அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் தனியார்கள் (குறிப்பாக பிஜேபியினர்) எப்படி கும்பாபிஷேகம்  நடத்த உள்ளனர்? இதன்மீது  இந்து அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? 

இந்த நிலையை வளரவிட்டால், இந்து அறநிலையத் துறை யின் கீழ்  உள்ள கோயில்களைத் தனியார்கள் கைப்பற்றும் நிலை ஏற்படாதா? இந்து அறநிலையத் துறை உடனடியாக செயலில் இறங்குமா? எங்கே பார்ப்போம்?


No comments:

Post a Comment