மருத்துவக் கல்வி இயக்கக இலச்சினை மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

மருத்துவக் கல்வி இயக்கக இலச்சினை மாற்றம்

சென்னை, ஜூன் 15 - மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இலச்சினை (லோகோ) புதிதாக மாற்றப்பட்டுள் ளது. அதன்படி, அந்த புதிய இலச்சினையை மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் ஆவணங்கள், மருத்துவக் கல்வி சான்றிதழ்களில் பயன் படுத்துமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளது.

மருத்துவத்தைக் குறிக்கும் குறியீட்டுடன் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என்ற வாக்கியமும், ‘மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்ற வாசகமும் அந்த இலச்சினையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மருத்து வக் கல்வி இயக்குநர் சாந்திமலர், சம்பந்தப் பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை இயக்குநர்கள் உள்ளிட் டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களும், தங்களது ‘லெட்டர் பேடில்' புதிய இலச்சினை யைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அதேபோல், மருத்து வம், துணை மருத்துவப் படிப்புகளுக்கான சான்றி தழ்களிலும் அதையே பயன்படுத்த வேண்டும்.

தொடர் மருத்துவக் கல்வி நிகழ்வுகள், துறை சார் பிற நிகழ்வுகளிலும் புதிய இலச்சினையைப் பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment