உல்லியக்குடி ரெங்கசாமி நூற்றாண்டுவிழாவை நடத்திட தா.பழூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 18, 2023

உல்லியக்குடி ரெங்கசாமி நூற்றாண்டுவிழாவை நடத்திட தா.பழூர் ஒன்றிய கலந்துரையாடலில் முடிவு


தா.பழூர்,ஜூன்18 - அரியலூர் மாவட் டம் தா.பழூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் உதய நத்தம் பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கம் இல்லத்தில் 13. 6 .2023 ஞாயிறு அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன் தலைமையேற்க, மாவட்ட அமைப்பாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் இரா. திலீபன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.பெரியார் பெருந்தொண்டர் சொ. மகா லிங்கம், ஒன்றிய தலைவர் இர.ராமச் சந்திரன் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் மாவட்ட ப.க, ஆசிரியரணி அமைப்பாளர் இரா.ராஜேந்திரன் ,மாவட்ட மாணவர் கழக தலைவர் த.சிவமணி, அன்புச்செல்வி மகாலிங்கம், த.ஹேமலதா ஆகியோர் பங்கேற்று கருத்துகளை எடுத்துக் கூறினர்.

மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன் ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி சிறப்புரை யாற்றினார்.

சட்ட எரிப்பு வீரர் தத்தனூர் சா.துரைக்கண்ணுவின் மறைவிற்கு இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள் கிறது. கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று சிறப்பாக செயல்படுத்துவதென வும், செந்துறையில் நடைபெறும் பெரி யாரியல் பயிற்சி முகாமிற்கு இளைஞர் களை அழைத்துச் செல்வது எனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஒட்டி தா.பழூர் அணைக்கரை, சிலகால், உல்லியகுடி, ஆயிபாளையம் உள்ளிட்ட இடங்களில் தெருமுனை கூட்டங்களை நடத்திடுவதெனவும், சுய மரியாதைச் சுடரொளி உல்லியக்குடி ரங்கசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக உல்லியக் குடியில் நடத்திடுவதெனவும் முடிவு செய்யப் பட்டது.

No comments:

Post a Comment