முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை 'வசந்தம்' இராமச்சந்திரனாருக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை 'வசந்தம்' இராமச்சந்திரனாருக்கு வீர வணக்கம்!

'வசந்தம்' இராமச்சந்திரன் என்ற அறிமுகத்துடன் கோவையில் வாழ்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கு.இராமச்சந்திரன் (வயது 98) அவர்கள் இன்று (24.6.2023) காலை 7.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக இருந்து இயக்கத்திற்கு அரும் பணியாற் றியவர், பல மாநாடுகளை சிறப்பாக நடத்தியவர். சமீபத்தில் கோவையில் அவர் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்து வந்தோம் (5.2.2023).

இயக்கப் பணி மட்டுமின்றி, வணிகத் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வழிகாட்டி வந்தவர்.  

இந்திய தொழில் வர்த்தக சபையின் கவுரவ செயலாளர், தென்னிந்திய சிறு நூற்பாலைகளின் தலைவர் முதலிய பொறுப்புகளில் இருந்தவர்.

அவருடைய வாழ்விணையர் திருமதி ரங்கநாயகி அம்மாள் அவர்கள் கண்ணும் கருத்துமாக இராமச் சந்திரனாரின் உடல் நலனைப் பாதுகாத்து வந்தார். அவருக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உண்டு.

அவர் ஒரு புத்தகத் தேனீ. தன் வீட்டின் ஒரு பகுதியை அரிய நூலகமாக்கியவர்.

பழைய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து எனக்குப் பயன்படத்  தந்த பெருந்தகையாளர்.

அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக் கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், கழகத்தினருக்கும், தலைமைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித் துக் கொள்கிறோம். 60 ஆண்டு காலம் திராவிடர் கழகத்தில் கட்டுப்பாட்டுடன் பயணித்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு நமது வீர வணக்கம்! வீரவணக்கம்!!

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை

24.6.2023

 


No comments:

Post a Comment