மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் மற்றும் பக்த சரண்தாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 

மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து பேசிய அவர்கள், "மணிப்பூரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பா.ஜ.க.வின் 'பிளவு அரசியலின்' விளைவு. மாநில அரசின் உளவுத்துறையின் தோல்வியின் விளைவும் கூட" என கூற்றம் சாட்டினர். தொடர்ந்து அவர்கள், "100-ஆவது 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு பின் மணிப்பூரைப் பற்றி பிரதமர் ஏன் எதுவும் கூறவில்லை? 'மணிப்பூரின் குரல்' என்ன ஆனது? ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு விடுத்த வேண்டுகோள் ஏன் முற்றிலும் தோல்வியடைந்தது?" என சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், "பிரதமர் தனது மவுனத்தைக் கலைத்து, மணிப்பூர் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், மாநிலத்தில் இயல்புநிலையை ஏற்படுத்தவும் அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ள வேண்டும். மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் தேசிய அனைத்துக் கட்சிக் குழுவை அனுமதிக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment