ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம்: அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 17, 2023

ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம்: அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயம்

இம்பால், ஜூன் 17 நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கலவரம் தொடர் கதை யாய் நீளுகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண் டும் என்று வலியுறுத்துகின்றனர். அதை அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் தீவிரமாக எதிர்க்கின்றன. இதனால் அங்கு இரு தரப்பிலும் நடந்து வருகிற மோதல்கள் பெருத்த உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங் களையும் ஏற்படுத்தி வருகின்றன. 

கடந்த மே மாதம் 3-ஆம் தேதி முதல் நடந்து வருகிற வன்முறைகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் வீடுகள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளன. கலவரங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சுமார் 350 முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் பல்வேறு நகரங் களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இணையதளச்சேவை முடக்கப்பட் டுள்ளது.

இந்த நிலையில் அங்கு மெய்தி இன மக்கள் அதிகமாக வசிக்கிற இம்பால் கிழக்கு மாவட்டமும், பழங்குடியினர் வசிக்கும் கங்க்போக்பி மாவட்டமும் சந்திக்கும் காமென் லோக் கிராமத்தின்மீது குகி இன போராளிகள் 14.6.2023 அன்று அதிகாலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். எதிர்தரப்பு வீடுகள் மீது குண்டுவீசி தாக்குதல் தொடுத்தனர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இம்பால் கிழக்குப் பகுதியில் ஊரடங்கு தொடர்கிறது. அங்கு 16.6.2023 அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அப்போது குகி போராளிகள் தாக்கி தங்கள் சமூகத்தினர் 9 பேர் கொல் லப்பட்டதைக் கண்டித்து எதிர்தரப் பினர் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்திலும் வன் முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக் காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.


No comments:

Post a Comment