குறிப்பிட்ட டைபாய்டு தடுப்பு மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

குறிப்பிட்ட டைபாய்டு தடுப்பு மருந்துகள் தரமற்றவையாக அறிவிப்பு

புதுடில்லி, ஜூன் 15 - அய்தராபாத்தில் தயாரிக்கப்பட்ட டைபாய்டு தடுப்பூசியில் குறிப்பிட்ட சில மருந்துகள் மட்டும் தரமற்றவையாக இருப்பதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை யான மருந்து -மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘டைப்பார்’ எனப்படும் டைபாய்டு தடுப்பு மருந்தின் குறிப்பிட்ட உற்பத்தி தொகுதி (பேட்ச்) மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அம்சங்களுடன் ஒத்துப்போகவில்லை என ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment