பா.ஜ.க., அ.தி.மு.க. மோதல் உச்சகட்டம் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

பா.ஜ.க., அ.தி.மு.க. மோதல் உச்சகட்டம் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்

சென்னை, ஜுன் 14 அண்ணா மலைக்கு எதிராக கண்டன தீர்மா னம் நிறைவேற்றப்பட்டதாக எடப் பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல மைச்சரான ஜெயலலிதா குறித்து அவதூறாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளதாக, அதிமுகவின் பிரமுகர்கள் கண் டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அண்ணா மலைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, தமிழ்நாடி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அண்ணாமலை, ஆங்கில நாளித ழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், மற்ற மாநில முதல மைச்சர்கள் உட்பட ஜெயலலிதா அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தனர். நம் பிரதமர் மோடி, ஜெயலலிதா மீது மரியாதையை கொண்டிருந்தார். ஆனால் அரசியல் அனுபவம், முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை, ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன், அவதூறாக பொறுப்பற்ற முறையில் பேசி யுள்ளார், இதற்கு மாபெரும் கண் டனம் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இது அதிமுக தொண்டர்கள் இடையே வேதனையும், மனஉளைச் சலையும் ஏற்படுத்தியுள்ளது.  


No comments:

Post a Comment