இது உண்மையா? இப்படியும் ஒரு திட்டமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 14, 2023

இது உண்மையா? இப்படியும் ஒரு திட்டமா?

"...'வருங்காலங்களில், தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்' என்று தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண் டுமென அவர் (அமித்ஷா) சொன்னவுடன் அவர் அண்ணா மலையைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்று நினைத்தோம்.

ஆனால் அவர் ஜெய்சங்கரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது. 2024  நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் அதற்குத் தலைமை தாங்க மோடி விரும்பவில்லை. இதற்கிடையில் மோடியை மீண்டும் பிரதமராக்கும் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். இல்லை. அந்தச் சூழலில், மாற்று ஏற்பாடாக வேறு ஒருவரைப் பிரதமராக முன்மொழியவும் திட்டம் வகுக்கப்படுகிறது. அதில் தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இதை மனதில் வைத்துத்தான், தமிழர்தான் பிரதமராக வர  - வேண்டுமென்றார் அமித்ஷா" என்றனர்.

பா.ஜ.க.வுக்கு உத்தரவு போடும் தலைமை அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.

அது மீண்டும் மோடியை முன்னிறுத்தினால், பா.ஜ.க. மீண்டும் பதவிக்கு வருவது 'துர்ப்பலமே" என்பதால்தான் இப்படி ஓர்  'உட்கட்சிப் போர்" பனிப்போர் போல் நடக்கிறது போலும் பா.ஜ.க.வில்....

அதனைத்தான் "ஜூனியர் விகடன்" ஏடு (18.6.2023) (லேட்டஸ்ட் இதழ்) கூறுகிறது. பிரதமர் பதவியில் பார்ப்பனர்கள் தலைமைக்கு வர எப்படியெல்லாம் பிரச்சார வியூகத்தை இப்போதே துவக்கி விட்டார்கள் - பார்த்தீர்களா?

ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உறவும் அதன் பின் எப்படியோ?

"தமிழர் என்றால் பார்ப்பனரும் உள்ளே புகுந்து கொள்வர்" என்ற பெரியாரின் தொலைநோக்கு வாக்கு பற்றி இப்போதாவது புரிகிறதா?

- "மணியோசை"


No comments:

Post a Comment