பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மேலும் மேலும் பலம் பெறுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் மேலும் மேலும் பலம் பெறுகிறது

பாட்னா, ஜூன் 13 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23 ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. அதில், மல்லிகார் ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங் கிரஸ்), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மம்தா (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), உத்தவ்தாக்கரே (சிவசேனா- உத்தவ்) ஆகியோர் பங்கேற்க ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். 

இத்தகவலை அய்க்கிய ஜனதா தள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார். 

இதுவரை 18 கட்சிகளின் தலை வர்கள் சம்மதம் தெரிவித்துள்ள தாகவும் அவர் கூறினார்.


No comments:

Post a Comment