குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் செந்தில்-சத்தியா புதிய இல்ல அறிமுக விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 12, 2023

குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் செந்தில்-சத்தியா புதிய இல்ல அறிமுக விழா!

குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் செந்தில் வேல் - மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி ஆகியோரின் புதிய இல்ல அறிமுக விழாவை 9.6 .2023 அன்று காலை 11 மணி அளவில் அப்பியம்பேட்டையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமை ஏற்று திறந்து வைத்தார். மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் சோ தண்டபாணி, மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாநகரத் தலைவர் என் சிவகுமார், வடக்குத்து தர்மலிங்கம், திராவிடன், தெற்கு சேப்பளாநத்தம் உத்தண்டி, கடலூர் மாதவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வேலு, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், கடலூர் மாதவன், திமுக செயலாளர் தட்சிணாமூர்த்தி, கிளைக் கழக தலைவர் தனசேகரன், வேகாகொல்லை வேணுகோபால், கதிர்வேலு, குறிஞ்சிப்பாடி நகரத் தலைவர் கனகராஜ், மகளிர் அணி பொறுப்பாளர்கள் தமிழ் ஏந்தி, குணசுந்தரி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர் வழக்குரைஞர் வான்மதி நன்றி கூறினார். கொள்கை பரப்புரை நிகழ்ச்சியாக புதிய இல்ல அறிமுக விழா நடைபெற்றது. கழகக் கொடி உயர்த்தப்பட்டது.


No comments:

Post a Comment