மதக் கலவரம் தூண்டிய பா.ஜ.க. செயலாளர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 13, 2023

மதக் கலவரம் தூண்டிய பா.ஜ.க. செயலாளர் கைது

காஞ்சிபுரம், ஜூன் 13   "இசுலாமிய வழிபாட்டுத்தலம் ஒன்றில் காணிக்கை" எண்ணும் காணொலியை "ஹிந்து கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கும் இசுலாமியர்" என்று கூறி செல்வம் என்பவர் பரப் பினார். இது தொடர்பாக பதட்டம் ஏற்பட்ட நிலையில் இந்த போலி வீடியோவை பகிர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளரை காவல் துறையினர் கைது செய்தனர்  காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளராக இருப்பவர் செல்வம். 

இவர் சமீபத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் பங்களாதேஷில் உள்ள இசுலாமியர் வழிபாட்டுத்தலத்தில் காணிக்கை எண்ணும் நிகழ்வு பதியப் பட்டு இருந்தது. 

 இந்த காணொலியின் கீழ் அவர் "இதோ நம் ஹிந்துக்கள் கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கைகளை இசுலாமி யர்கள் கொள்ளை அடிக்கின்றனர் "இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இசுலாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா, ஆண்டவா தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பதட்டம் ஏற்படும் சூழல் நிலவியது. இதனை அடுத்து வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் என்பவர் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறை யினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்


No comments:

Post a Comment