கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 219 ரயில் விபத்துகள் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 26, 2023

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 219 ரயில் விபத்துகள் மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடில்லி, ஜூலை 26 - கடந்த அய்ந்து ஆண்டுகளில் 219 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக மாநி லங்களவையில் ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் மிகப் பெரிய விபத்து, கடந்த ஜூனில் ஒடிசாவின் பாலஷோரில் நடந்த ரயில் விபத்து ஆகும். இந்த விபத்தில் 293க்கும் மேற்பட்ட உயிரிழந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்ட காயமடைந்தனர். இது தொடர்பாக மாநிலங்களவை நாடாளு மன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடபட்ட அறிக்கையில்:

கடந்த 5 ஆண்டுகளில் 219 ரயில் விபத்துகள் நடந்துள்ளது. இதில் மிகப் பெரிய விபத்து, கடந்த ஜூனில் ஒடிசாவின் பால ஷோரில் நடந்த ரயில் விபத்து ஆகும்.

5 ஆண்டுகளில் நடைந் துள்ள ரயில் விபத்துகளின் முறையே 2018_-2019-ஆம் ஆண்டில் 59 ரயில் களும், 2019-_2020ஆம் ஆண்டில் 55 ரயில்களும், 2020_-2021ஆம் ஆண்டு 22 ரயில்களும், 2021_-2022-ஆம் ஆண்டில் 35 ரயில்க ளும், 2022_-2023-ஆம் ஆண்டில் 48  ரயில் களும் என மொத்தம் 219 ரயில்கள் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கபட் டுள்ளது.

2004_-2014 காலப் பகுதியில் தொடருந்து விபத்துகளின் சரா சரி எண்ணிக்கை  171.7 ஆக ஆண்டுக்கு இருந்தது. ஆனால், 2014_-2023க்கு இடையில், இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 70.9 ஆக குறைந்துள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment