கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் சகோதரர் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் சகோதரர் மறைவு

கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

குடந்தை, ஜூலை 3- சாக் கோட்டை மறைந்த திரா விடர் கழகத்தின் தலைவர் கணபதி ஏகாம்பாள் மகனும், கும்பகோணம் சட்ட மன்ற உறுப்பினர் சாக் கோட்டை க. அன் பழகன் சகோதர ருமான மறைந்த க.உண்மை அவர் களுக்கு 29.06.2023 மாலை 3 மணியளவில் மலர் மாலை கள் வைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை  செலுத்தினர்.

தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குருசாமி தலைமையில்  குடந்தை கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கு நிம்மதி,  குழந்தை ஒன் றிய செயலாளர் கோவி.மகாலிங்கம், திராவிடர் தொழிலாளர் அணியின் மாவட்ட செயலாளர் கோவி.பெரியார் கண் ணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மு. திரிபுர சுந்தரி, குடந்தை மாநகர மகளிர் அணி செயலாளர் அம்பிகா, மாவட்ட பகுத் தறிவாளர் கழகத்தினு டைய செயலாளர் பேராசி ரியர் மு. சேதுராமன், குடந்தை மாநகர செய லாளர் வழக்குரைஞர் பீ. ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் ஆ.தமிழ்மணி, திருவிடைமருதூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பவுண்டரீகபுரம் முருகேசன்,  பட்டீஸ்வரம் கிளைக் கழகத் தலைவர் அ. இளவழகன், அய்யம் பேட்டை கிளைக் கழகத் தலைவர் அறிவழகன், மனுநீதி சோழன் நகர் பகுதி பொறுப்பாளர் நெய்வேலி பழனிச்சாமி மற்றும் கழக தோழர்கள் பொதுமக்கள் பெருமள வில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment