சிதம்பரம் மாவட்டம் - கீரப்பாளையம் ஈரோடு பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

சிதம்பரம் மாவட்டம் - கீரப்பாளையம் ஈரோடு பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள்

சிதம்பரம், ஜூலை 4- ஈரோடு பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் 23.6.2023 அன்று கீரப் பாளையத்தில் மாவட்ட ப.க. தலை வர், கோவி.நெடுமாறன் தலைமை யில் நடைபெற்றது.

மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தெ.ஆறுமுகம், தொழிலா ளர் அணி செயலாளர் அ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலை வர் பேராசிரியர் பூ.சி.இளங்கோ வன், மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக, கழக பேச்சாளரும், மாவட்ட இணைச் செயலாளரு மான யாழ்.திலீபன், தன் உரையில், வைக்கம் போராட்ட வரலாறு, சேரன்மாதேவி குருகுலத்தில் நடைபெற்ற ஜாதியத் தீண்டாமை, அதனை நீக்க தந்தை பெரியார் எடுத்த செயல்கள், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனைகள், கலைஞர் தன்னை, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ எனக் கூறி யது ஆகியவற்றை விளக்கி உரை ஆற்றினர். நிகழ்ச்சியில், பெருமாத் தூர் இராமலிங்கம் கலந்து கொண் டார்.

சோழத்தரம்

25.6.2023 ஞாயிறு மாலை 5:00 மணிக்கு சோழத்தரம் கடைவீதியில், ஈரோடு பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

காட்டுமன்னார்குடி ஒன்றிய செயலாளர் ப.முருகன் தலைமை யேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சிற்பி. சிலம்பரசன் வரவேற்புரையாற்றினார்.

திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ணசாமி, ஆண்டி பாளையம் குணசேகரன், ஒன்றிய செயலாளர் இரா.இராசசேகரன், பாளையங்கோட்டை தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத் தலைவர் பேராசிரி யர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், தமிழக வாழ்வு ரிமை உட்சி உயர்நிலைக் குழு உறுப்பினர் மு.பாலகுருசாமி ஆகி யோர் உரையாற்றிய பின்னர் தலைமை கழகப் பேச்சாளரும், மாவட்ட இணைச் செயலாளரு மான யாழ்.திலீபன் - வைக்கம் போராட்ட நூற்றாண்டு, சேரன் மாதேவி குருகுலத்தில் நிலவிய ஜாதிய வேறுபாடு, அதைப் போக்க தந்தை பெரியார் எடுத்த நட வடிக்கை ஆகியவற்றையும் - முத் தமிழ் அறிஞர் கலைஞர் ‘நான் ஒரு சுயமரியாதைக்காரன்’ என்று கூறிய கருத்துக்களையும் விளக்கி உரையாற்றினார்.

இறுதியாக ஆண்டிப்பாளையம் தலைவர் மு.குணசேகரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment