ஓர் ஓட்டை வாய்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

ஓர் ஓட்டை வாய்...

பிஜேபியின் அரட்டை ஆசாமி ஒருவர் முதலமைச்சர் பொய் சொல்லக் கூடாது என்று கூறியதாக தின பூணூல் மலர் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. மாதம் 2 கோடி பேர்களுக்கு பிரதமர் மோடி வேலை தருவதாகச் சொன்னார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டதாகக் கூறி அப்படி யானால் 240 கோடி பேர்களுக்கு வேலை கொடுக்க முடியுமா என்று அந்த ஓட்டை வாய் உளறிக் கொட்டியுள்ளது.

மாதம் 2 கோடி பேருக்கு என்று முதலமைச்சர் கூறினாரா? ஆண்டுக்கு  2 கோடி பேர்களுக்கு மோடி சொன்னதைத்தானே முதலமைச்சர் சுட்டிக் காட்டினார். பொய்யைத் தவிர வேறு பேசுவ தில்லை என்று சத்தியப் 'பிரமாணம்' செய்து கொண்டு விட்டதோ ஆர்.எஸ்.எஸ். கும்பல்? மேலும் எதையாவது கேட்டால் அதெல் லாம் 'ஜூம்லா' என்கின்றனர்.

No comments:

Post a Comment