ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 3, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

3.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கம்மத்தில், ராகுல் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

* தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் தலைமையில் பாஜக கூட்டணியில் சேர்ந்து அமைச்சர்களான ஆறு பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

* எதிர்க்கட்சி ஆளும் மாநில ஆளுநர்கள் நடவடிக் கைகளை மோடி அரசு கட்டுப்படுத்த வேண்டும் என் கிறார் மூத்த பத்திரிக்கையாளர் நிலஞ்சன் முகோபாத்யாய.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்திட பிற் படுத்தப்பட்டோர் வாக்குகளை உறுதிப்படுத்த வேண்டும் என அமித் ஷா பேச்சு.

* தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், முதியோர் நிதி உதவி மாதம் ரூ.4000 ஆக உயர்த்தப்படும் என கம்மம் நகரில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ராகுல் அறிவிப்பு.

* தமிழின் தோற்றத்தையும், தமிழினத்தின் தோற்றத் தையும் கணிக்க முடியாத அளவுக்கு தொன்மையான வரலாறு நமக்கு உண்டு. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து வருகிறோம் என வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ர மெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்திய 36ஆவது தமிழ் விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

* 250 ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்ததை விட 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் தான் நாட்டில் அதிக அளவு கொள்ளை நடந்துள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜகவில் சேருங்கள், அனைத்து பாவங்களும், குற்றங்களும் கழுவப்படும் என அஜித் பவார் கோஷ்டி பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டது குறித்து  ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் கிண்டல்.

தி இந்து:

* ஆளுநர் ஆர்.என்.ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் , தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை மோடி அரசு சந்திக்க நேரிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.

தி டெலிகிராப்:

* கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தனது முதல் பணியின் போது நடத்தப்பட்ட ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை வெளியிடுவதாக அறிவிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மகாராட்டிரா அரசியல் குழப்பம் - பா.ஜ.,க.வின் 'வாஷிங் மிஷின்' மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள தாக ஜெய்ராம் ரமேஷ் விளாசல்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment