ஒசூரில் தமிழ்நாட்டு கலைவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

ஒசூரில் தமிழ்நாட்டு கலைவிழா

ஒசூரில் தமிழகப் பண்பாட்டு இயக்கம் சார்பில் தமிழ்நாட்டு கலைவிழா க.இரா.தமிழரசன் தலைமையில் ஒசூர் உள் வட்ட சாலை தந்தைபெரியார் சதுக்கம் பகுதியில் நடைபெற்றது.இவ்விழாவில் அயலி திரைப்பட இயக்குநர் முத்துகுமாருக்கு மக்கள் கலைஞன் விருது,திராவிடர் கழக தோழர் ஓவியர் சிகரனுக்கு இளம் படைப்பாளி விருது, பரணி பாவலனுக்கும் தனித் தமிழ் விருது, சமுக ஆர்வலர் விருது கணேஷ்,உதிரம் மாரியப்பன் ஆகியோர்க்கு வழங்கபட்டன..

இந்நிகழ்ச்சியில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.மனோகரன், ஒசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், பொதுக் குழு உறுப்பினர் அ.செ.செல்வம் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, அமைப்பாளர் ப.முனுசாமி, மகளிரணி மாவட்ட தலைவர் செ.செல்வி, மகளிரணி செயலாளர் கோ.கண்மணி, ஒசூர் மாநகராட்சி உறுப்பினர்கள் மா.தேவி,கு. பாக்கியலட்சுமி, என்.எஸ்.மாதேஷ்வரன், சென்னீரப்பா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment