இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

இந்தியாவின் கடன் எவ்வளவு தெரியுமா?

புதுடில்லி, ஜூலை 29- நாடாளு மன்ற மழைக்காலக் கூட் டத் தொடர் 20.7.2023 அன்று முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது. மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சியி னர் தொடர்ந்து எதிர்ப் புத் தெரிவித்து வருகின் றனர். 

இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் தொடர் பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள் விக்கு, ஒன்றிய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.  அதில், “ரிசர்வ் வங்கியின் தரவுகள்படி, நாட்டின் வெளிநாட்டுக் கடன் 624.65 பில்லியன் அமெ ரிக்க டாலராக (சுமார் ரூ. 46 லட்சத்து  80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து உள்ளது. அதாவது, உலக வங்கி உள்ளிட்ட வெளி நாட்டு அமைப்புகளிட மிருந்து பெறப்பட்ட கடன் 74.84 பில்லியன் டாலர். இதில், அரசு மட் டும் வாங்கிய கடன் 63.45 பில்லி யன் டாலர். 11.39 பில்லியன் டாலர் அரசு அல்லாத நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இதில், பன்னாட்டு நாணய நிதி யத்திடம் வாங்கப்பட்டு உள்ள கடன் 22.26 பில்லி யன் டாலர்” என தெரிவித்துள்ளார். இந்தியா வின் வெளிநாட்டுக் கடன், கடந்த 4 ஆண்டு களில் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

ரிசர்வ்  வங்கியின் தர வுகளின்படி, இந்தியா வின் வெளிநாட்டுக்கடன் கடந்த 2021 மார்ச் இறுதி  வரையில், 573.4 பில்லியன் டாலராக இருந்தது. இது, 2022 மார்ச் மாத இறுதி யில் 619.1 டாலராக அதிகரித்தது.  இதுவும், இந்தியாவின் ஒட்டு மொத்தக் கடனில் மூன் றில் ஒருபகுதி மட்டுமே ஆகும். ஏற்றுமதி கடன் கள், வணிகக் கடன்கள், வெளிநாடு வாழ் இந்தியர் களின் வைப்புத் தொகை கள், குறுகிய காலக் கடன் கள், நாணயம் மற்றும் வைப்புத்தொகைகள், கடன் பத்திரங்கள், முன்பணங்கள், நேரடி முதலீடு உள்ளிட்டவை தனியாகும். அவை நேரடி வெளிநாட்டுக் கடனை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப் பிடத்தக்கது. அதாவது, கடந்த 2023 மார்ச் வரை யிலான கணக்குப்படி, ஒன்றிய அரசின் மொத் தக் கடன் தொகை சுமார் ரூ. 155.8 லட்சம்  கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 57.3 சதவிகி தம் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment