வலங்கைமான் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

வலங்கைமான் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

வலங்கைமான், ஜூலை 7- வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகத்தின் கலந்து ரையாடல் கூட்டம் கோவிந்தகுடி கார்த்திகேயன் இல்லத்தில் 3.7.2023 மாலை 6 மணியளவில் குடந்தை மாவட்ட துணைத் தலைவர் வலங்கை வே.கோவிந்தன்  தலைமையிலும், ஒன் றிய செயலாளர் பவானி சங்கர் அவர்களின் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கோவிந்தகுடி சி.இராமச்சந்திரன் தமிழ்நாடு அரசு கழக பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர் தி.கார்த்தி கேயன் பெரியார் நகர் வீரமணி, கோவிந்தகுடி பெரியார் பெருந் தொண்டர்கள் இரா. ஜெயபால், ஆர்.வரதராஜன், பட்டீஸ் வரம் கழகப் பொறுப்பாளர் போட்டோ மகாதேவன், மாவட்ட மகளிர் அணி யின் தலைவர் எம். திரிபுர சுந்தரி மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் உள்ளிக்கடை சு.துரை ராசு, அவர்களை தொடர்ந்து மாவட்ட கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

13.05. 2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழுவில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானங்களை முழுமையாக ஏற்று செயல்படுத் துவது என்றும், தலைவர் தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடர்பான செய் திகளை மக்க ளுக்கு தெரியப்படுத்தும் வகை யிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 வயதில் 80 ஆண்டு அர்ப்பணிப்பு பொது வாழ்வை விளக் கும் வகையிலும் திண்ணைப் பிரச்சாரம் முதல் பொதுக் கூட்டம் வரை நடத்து வது, 

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை திராவிட மாடல் ஆட்சி யின் விளக்க  கூட்டமாக நடத் துவது  நமது தோழர்களின் இல்லங் களில் கண்டிப்பாக கழக கொடியை ஏற்றி வைப்பதோடு நமது இலட்சிய ஏடான விடுதலையை வாங்க வேண்டுவது,  இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம் போன்ற அமைப்புகளில் ஆங்காங்கே இருக்கும் தகுதி வாய்ந்த தோழர்களை ஈடுபடுத்தி இயக்க வளர்ச்சிக்கு பாடு பட வேண்டும் என்பதை எடுத்துக் கூறி தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க. குரு சாமி உரையாற்றினார்.

No comments:

Post a Comment