பா.ஜ.க.வின் மோசடி நாடகம் அம்பலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

பா.ஜ.க.வின் மோசடி நாடகம் அம்பலம்

சிறுநீர் கழித்து இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் நபர் ‘நான் அவனில்லை' என்று ஒப்புகொண்டார்!

போபால், ஜூலை 10 மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பவர், தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்மீது சிறுநீர் கழித்தார், அதற்காக பரிகாரம் தேடும் வகையில் முதலமைச்சர் சிவராஜ் சிங், அந்த இளைஞனின் கால்களை கழுவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரும், கால் கழுவி விடப்பட்டவரும் வேறு வேறு நபர்கள் என்று தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மத்திய பிரேதச மாநிலத்தில் பழங் குடியின இளைஞர்மீது பா.ஜ.க. நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பர்வேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

சித்தி தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உதவி யாளர் என்று கூறப்படும் பர்வேஷ் சுக்லாவை காவலர்கள் கைது செய்த நிலையில் அதே பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுக்லாவின் வீட்டின் சிறுபகுதியை அதிகாரிகள் இடித்தனர். இந்நிலையில் இடிக் கப்பட்டது சிதலமடைந்த மாட்டுத் தொழுவம் என்றும், அதை அவர்களே இடித்து புதிதாக கட்ட திட்டமிட்டிருந்த நிலையில் அரசே அதை இடித்துக் கொடுத்தது  என்று கூறப் பட்டது. அதேவேளையில் பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த இளைஞரை வரவழைத்த அம்மாநில பா.ஜ.க. முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அந்த இளைஞரின் கால்களை பத் திரிகையாளர்கள் முன் கழுவவைத்து செய்தி யாக்கினர். மேலும், முதலமைச்சரே என் கால் களைக் கழுவியதால் பர்வேஷ் சுக்லா மீது வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபரும் கால்களை கழுவ அழைத்துவரப்பட்ட நபரும் வேறுவேறு நபர்கள் என்பது செய்தியாளர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தவிர, பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழிக்கும் காட்சிப் பதிவில் இருந்தது 16 - 17 வயது மதிக் கத்தக்க சிறுவன். அவன் சிறுவன் என்பதை மறைத்து போக்சோவில் இருந்து தப்பிப்பதற் காக இளைஞர் என்று கூறப்பட்டது. பின்னர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது. ஆனால், முதலமைச்சர் காலை கழுவிவிட்ட நபரோ 40 வயது மதிக்கத்தக்க நல்ல மனநிலையுடன் உள்ளவராக இருக்கிறார். எதை மறைப்பதற்கு அல்லது யாரைக் காப்பாற்ற இந்த நாடகம்? என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.  இந்த நிலையில் பா.ஜ.க.வின் நாடகம் ஒரு வாரம் கூடத் தாக்குபிடிக்காமல் அம்பலமாகி உள்ளது.

No comments:

Post a Comment