இந்தியாவில் கரோனா 73 ஆக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 26, 2023

இந்தியாவில் கரோனா 73 ஆக உயர்வு

புதுடில்லி, ஆக.26 இந்தியாவில் 24.8.2023 அன்று 54 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தினசரி பாதிப்பு 73 ஆக உயர்ந்தது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 859 ஆக அதிகரித்தது. கரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணம் அடைந்தனர். 

இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 424 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 24 ஆக அதிகரித்தது. மொத்தம் 1,508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லாத நிலையில், நேற்று ஒருவர் பலியானார். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 927 ஆக உயர்ந்தது.


No comments:

Post a Comment