பலமிக்க கண்ணாடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

பலமிக்க கண்ணாடி

கண்ணாடியை வெட்டுவதற்கு வைர முனையை பயன்படுத்துவர். ஆனால், அத்தனை உறுதியான வைரத்தின் மீதே கீறலை ஏற்படுத்துமளவுக்கு உறுதியான கண்ணாடியை சீன விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.

யான்ஷான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகின் மிக வலுவான கண்ணாடியை உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். வைரத்தையே பிளக்குமளவுக்கு பலத்தையும், ஒளி ஊடுருவும் தன்மையும் கொண்டதாக அந்தக் கண்ணாடி உள்ளது.

‘ஏ.எம்., 3’ என்று பெயரிடப்பட்டுள்ள இக்கண்ணாடிக்கு இன்னொரு பலமும் உண்டு.

இது ஒரு குறைமின் கடத்தியாகவும் செயல்படும் திறன் கொண்டது. எனவே, சூரிய மின் தகடுகளில் ஏ.எம்.,3யை பயன்படுத்த முடியும் என யான்ஷான் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட ஏ.எம்.,3 கண்ணாடியை அணிகலனா கவும், பூமியை அலங்கரிக்கும் சூரிய மின் பலகைகளாகவும் தயாரிக்க முடிவது, ஆச்சரியமான செய்திதான்.

No comments:

Post a Comment