குன்னூர் - கூடலூரில் பயிற்சிப் பட்டறையை நடத்திட நீலமலை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

குன்னூர் - கூடலூரில் பயிற்சிப் பட்டறையை நடத்திட நீலமலை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!

குன்னூர், ஆக.7- நீலமலை மாவட்ட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் குன்னூர் இன்னிசை (மருத்துவர் கவுத மன்) இல்லத்தில் 6.08.2023 ஞாயிறு மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் கவுத மன் தலைமை தாங்கி உரையாற் றினார்.

அவரது உரையில் "நீலமலை மாவட் டத்தில் இயக்கப் பணிகள் கூடுதலாக நடத்தப்படவேண்டும் அதற்கு பொருளி யல் தேவையை நான் பார்த்துக்கொள் கிறேன் பணிசெய்ய தோழர்கள் முன் வரவேண்டும் என்றார்.  முன்னதாக மாவட்ட செயலாளர் நாகேந்திரன் கடவுள் மறுப்புக்  கூறி அனைவரையும் வரவேற்றார். 

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆ.கரு ணாகரன், இராவணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட துணைத் தலை வர் யா.சத்தியநாதன், மாவட்ட ப.க தலை வர் இரா.வாசுதேவன், மூர்த்தி, ஈஸ்வரன், சண்முகசுந்தரி, இராம்குமார் ஆகியோர் இயக்க வளர்ச்சிக்கான கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். 

தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் கலந்துகொண்டு "ஈரோடு பொதுக்குழு, சென்னை தலை மைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களை நாம் செயல் படுத்த வேண்டும். இல்லந்தோறும் கொடி, நகரில் முக்கிய இடங்களில் கொடி ஏற்ற வேண்டும், தெருமுனைக் கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார். பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு"தகைசால் தமிழர்' விருது அறி வித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு நன்றியையும் பாராட்டையும், விருது பெற்ற தமிழர் தலைவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வ தெனவும், பொதுக்குழு, செயற்குழு தீர் மானங்களை முழுமையாக ஏற்று செயல் படுத்துவது எனவும், நீலமலை மாவட்டத் தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 இடங்களில் பயிற்சிப் பட்டறை நடத் துவது எனவும், கலைஞர் நூற்றாண்டு, வைக்கம்போராட்டம் நூற்றாண்டு, குரு குலப் போராட்டம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெருமுனைக்கூட்டம் நடத் துவது எனவும், வீடுதோறும் கழகக்கொடி, நகரின் முக்கியப்பகுதிகளில் கழகக் கொடி ஏற்றுவது எனவும், செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட் டது.

பொறுப்பாளர்கள் நியமனம்

நீலமலை மாவட்ட தலைவர் வேணு கோபால், மாவட்ட செயலாளர் நாகேந் திரன், மாவட்ட துணைத் தலைவர் சத்தியநாதன், மாவட்ட இ.அ.தலைவர் பிரேம்குமார், மாவட்ட இ.அ.செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் ராம்குமார், கட்ட பெட்டு பகுதி செயலாளர் மூர்த்தி, குன்னூர் மகளிரணி தலைவர் சண்முகசுந்தரி, மாவட்ட ப.க.தலைவர் பொறியாளர் ஈஸ்வரன், மாவட்ட ப.க.செயலாளர் வாசுதேவன் ,பொதுக்குழு உறுப்பினர்கள் ஆ.கருணாகரன், ராவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கூட்ட முடிவில் ராம்குமார் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


No comments:

Post a Comment