தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம்!

சென்னை, ஆக. 6 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்­நாடு அரசு பல்­வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்­நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுத்தும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி எண் 110இன் கீழ் அறிவிக்கப்பட் டு அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டது (தமிழ்­நாடு சட்டம் 17/2021). இச்சட்டம் 13.10.2021 முதல் அமலுக்கு வந்தது. இவ்வாணையம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி பி.ஆர்.சிவகுமார் தலைமையில் செயல்பட்டு வருகிற நிலையில் தற்போது காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்தில் ஜெ.ரேகா பிரியதர்ஷினியை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதியதாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று தமிழ்­நாடு அரசு அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment