சரியான நடவடிக்கை! கட்டாயத் திருமணம்! தாலியை பிடுங்கி உண்டியலில் போட்ட மணப்பெண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

சரியான நடவடிக்கை! கட்டாயத் திருமணம்! தாலியை பிடுங்கி உண்டியலில் போட்ட மணப்பெண்

ராமநாதபுரம், ஆக.23   இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன், கிருஷ்ணப்பிரியா ஆகியோருக்கு திருமணம் செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் முடிவு செய்தனர். இரு குடும்பத்தினர் தரப்பிலும் அதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டன. திங்கள் அன்று காலையில் மணப்பெண்ணும் மாப்பிள்ளை யும் திருவாடானை   ஆதி ரெத் தினேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கே இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள கோயில் நிர்வாகத்தில் உள்ள திருமண பதிவேட்டில் மணப்பெண்ணும், மண மகனும் கையெழுத்தும் போட்டு கோவிலில் ரசீதும் பெற்று கொண்டனர். 

திருமணத்திற்கு தயாரான இரு குடும்பமும் உறவினர்கள் குழுமி இருக்க  புரோகிதர் எடுத்துக் கொடுத்த தாலியை   மாப்பிள்ளை  மணப்பெண் கழுத்தில்   கட்ட சென்றார். யாரும் எதிர்பாராத விதமாக மணப்பெண் தாலியை பறித்து கையில் வைத்துக் கொண்டார். அதை கோவில் உண்டியலிலும் போட்டார் மணப்பெண். உற வினர்கள் மணப்பெண்ணிடம் விசாரித்தபோது பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தான் திரும ணத்துக்கு ஒத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு தற்போதைக்கு திரு மணம் செய்து கொள்ள விருப் பம் இல்லை என்றும் தைரியமாக தெரிவித்தார் மணப்பெண். அதிர்ச்சி அடைந்த இருவீட் டார்கள் உண்டியலின் மேலேயே இருந்த தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கட் டுமாறு வற்புறுத்த மணப்பெண் தொடர்ந்து திருமணத்திற்கு மறுக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  தகவல் அறிந்து வந்த திருவாடானை காவல் ஆய்வாளர் ஜெயபாண்டியன் இரு வீட்டாரிடமும் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டார். காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் திரும ணத்திற்கு ஒத்துக் கொள்ளாத நிலையில் திருமணம் நின்று போனது. 

இதனால் மணமகன் தரப்பில் இருந்து திருவாடனை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment