ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் ஒன் றிய அரசின் நடவடிக்கைக்கு கேரள சட்டமன்றம் தனது கவலை யையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒருதலைப்பட்சமான மற்றும் அவசரமான இந்த நடவடிக்கை அரசமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை வெற்றிடமாக்குகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் தேசத்தின் ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பதாகவும் கருதப்படு கிறது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பாதிக்கும் பிரச்சினை களில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி பொதுவான அணுகுமுறை ஏற்படும் வரை ஒன்றிய அரசு இந்த அவசர நடவடிக்கைகளை கைவிட வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அனைத்துக் கட்சி உறுப் பினர்களின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

No comments:
Post a Comment