பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை கிடையாது ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திட்டவட்டம்

ஜெய்ப்பூர், ஆக. 10 -  'பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது' என, ராஜஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. ராஜஸ்தானில், முதல மைச்சர் அசோக் கெலாட் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக் கிறது. 

இந்த மாநிலத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதி கரித்து வருவதாக பா.ஜ., குற்றஞ்சாட்டி வருகிறது. சமீபத்தில் கூட, பில்வாரா மாவட்டத்தில், 4 வயது சிறுமி கூட்டு பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு, செங்கல் சூளையில் வைத்து எரித்துக் கொல் லப்பட்டார். 

இந்த வழக்கில், ஏழு பேரை காவல் துறையினர் கைது செய் தனர். வழக்கு விசாரணை விரை வாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என, மாநில அரசு உறுதி அளித்துள்ளது. இந்நிலையில், பாலியல் துன்புறுத்தல், அத்து மீறல், வன்கொடுமை உள்ளிட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடு வோர் மற்றும் குற்றப் பின்னணி உள்ளோருக்கு அரசுப் பணிகள் வழங்கக் கூடாது என, மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் 8.8.2023 அன்று அறிவித்தார். 

இதற்கான ஆவணங்கள் காவல் நிலையங்களில் பராமரிக்கப்பட்டு மாநில அரசுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment