கடலூர், ஆக. 10 இரும்புக் கம்பிகளை திருடிய பாஜக கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பான்பரி மார்க்கெட் மிகவும் பழைமையானது. இங்கு உள்ள கடைகளை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்ட மாநக ராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது அங்குள்ள கடைகள் இடிக் கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப் புள்ள இரும்புப் பொருட்கள் திடீரென காணாமல் போனது. இது குறித்து கடலூர் செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் கடலூர் மாநகராட்சி 28ஆவது வார்டு பாஜக கவுன்சிலர் சக்திவேல் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Thursday, August 10, 2023
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment