குண்டு துளைக்காத சங்கிலி உடை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 10, 2023

குண்டு துளைக்காத சங்கிலி உடை!

ஹாலிவுட்டின் பேட்மேன் பிகின்ஸ் படத்தில், பேட்மேன் அணிந்து வரும் உடை தொள தொளவென இருக்கும். அவர் மாடியிலிருந்து குதிக்கையில், அதே துணி திடீரென விரிந்து, விறைப்பாகி இறக்கை போல மாறிவிடும்.இது போலவே ஒரு துணியை தயாரித்து அசத்தியுள்ளனர் இரு நாட்டு விஞ்ஞானிகள். 

சிங்கப்பூரின் நான்யாங் பல்கலை. மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்பப் பல்கலை. விஞ்ஞானிகள் தான் அதை சாதித்த வர்கள்.அந்தக் காலத்தில் போரில் தற்காத்துக் கொள்ள சங்கிலி உடைக் கவசம் பயன்பட்டது. 

அதை இந்த கால முப்பரிமாண அச்சு இயந் திரத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த வினோதமான உடையை நெய்துள்ளனர்.முதலில் நைலானில் சிறிய சங்கிலிகள் செய்து அவற்றை ஒரு துணி போல பின்னி, ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து வெற்றிடத்தை உருவாக்கினர்.இந்த சங்கிலித் துணி மீது அதிக அழுத்தத்தை உண்டாக்கும் போது, இளக்கமான நைலான் சங்கிலிகள், விறைப்படைந்து, பல மடங்கு எடையைத்தாங்கும் அளவுக்கு பலம் பெற்றன.

இதே போல, முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் அலுமினிய சங்கிலித் துணியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த சங்கிலித் துணியும் அழுத்தத்திற்கு ஆளானபோது, இளகிய நிலையிலிருந்து, இறுகிய நிலைக்கு மாறிவிடும்.

இளகிய நிலையிலிருந்து இறுக்கத்திற்கு, வேண்டிய போது மாறும் துணி வகை, பல பயன்களைத் தரும். விண்வெளி, மருத்துவம், பாலங்கள் என பல துறைகளில் இந்தத் துணிக்கு தேவை உள்ளதாக ‘நேச்சர்’ இதழ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment